பயிற்சி நெறிகளை சான்றளித்தல்  
 

இலங்கையின் தேசிய தொழில்சார் தகைமைக் கட்டமைப்பை மூன்றாம் நிலைக்கல்வி தொழில்சார் கல்வி ஆணைக்குழு தாபித்தது. தேசிய தொழில்சார் தகைமைகள் (NVQs) கைத் தொழிற் துறையினால் தேசிய ரீதியாக விருத்தி செய்யப்பட்ட தரங்களைக் கொண்டமைந்தது. இத்தரங்கள் உயர்மட்டத்தில் செயலாற்றும் வேலையாளின் தேர்ச்சிகளைக் குறிப்பிடு வதுடன் சர்வதேச ரீதியான அடிப்படையையும் கொண்டுள்ளன. NVQ கட்டமைப்பானது நிறுவனங்கள் தமது மாணவரினதும் நாட்டினதும் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் பாடநெறிகளை விருத்திசெய்யும் விதமாக அவர்களுக்கு வழிவிடுகின்ற மிகவும் நெகிழ்ச்சியான தொன்றாகும்..

NVQ தகைமைக்கான சான்றிதழை வழங்க வழிவிடுப்பதற்காக பாடநெறிகளை தர முன்வரும் பயிற்சி நிறுவனங்கள் TVEC யினால் நற்சான்றளிக்கப்பட வேண்டியுள்ளன. TVEC யில் பதிவு செய்துள்ள பயிற்சி நிறுவனங்கள் நற்சான்றளிக்கப் படுவதற்காக விண்ணப்பிக்கும் தகுதியைக் கொண்டுள்ளன. NVQ 5ஆம் 6ஆம் மட்டங்களில் தேசிய டிப்ளோமா பாடநெறிகளை வழங்க விரும்பும் நிறுவனங்கள் அத்தகைய பாட நெறி நற்சான்றளிப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் ISO தர முகாமைத்துவ முறையொன்றை முழுமை யாகத் தாபித்து TVEC யின் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 
   
   
   
   
   
   
   
     
  சான்றளிப்புக்காக விண்ணப்பித்தல்  
 

TVEC இணையத்தளங்களிலிருந்து நற்சான்றளிப்பு விண்ணப் பங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளப்படலாம். அல்லது நாரஹேன்பிட்ட நிபுணத்த பியச வில் அமைந்துள்ள TVEC காரியாலத்தில் அதனைப் பெற்றுக் கொள்ளலாம். பயிற்சிப் பாடநெறிகள், தேசிய தொழில்சார் தகைமைக் கட்டமைப்பின் அடிப்படையிலேயே சான்றளிக்கப்படுவதால் தேசிய தேர்ச்சித்தரம், தேர்ச்சிமட்டப் பாடவிதானம் என்பன சான்றளிக்கப்படும் விண்ணப்பத்துக்கான முன் தேவை ளாக உள்ளன.

NVQ மட்டம், சம்பந்தப்பட்ட NVQ தகைமை, சம்பந்தப்பட்ட தேர்ச்சி அலகுகள் மற்றும் ஏனைய இவை தொடர்பான தகவல்கள் தேசிய தேர்ச்சி தரங்களில் கிடைக்கக்கூடியதாக உள்ளன.

பயிற்சித் திட்டம் மற்றும் ஏனைய பயிற்சி வழங்கும் ஆவணங்களைத் தயாரிப்பதற்கு சுருக்கமான பாடவிதானம், பயிற்றுனர் வழிகாட்டிகள், பயிலுநர் வழிகாட்டிகள் முதலான வற்றைக் கொண்ட CBT பாடவிதானம் அவசியமாகும்..
 

 
   
   
   
   
   
   
   
   
  பாடநெறி நற்சான்றளிப்புக் கணிப்பீடு  
 

தேசிய தேர்ச்சித்தரத்தின் அடிப்படையில் நற்சான்றளிப்புக் கணிப்பீடடு இடம்பெறும். நற்சான்றளிப்புக்கு விண்ணப்பிக்கும்போது தேசிய தேர்ச்சித் தரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான தேர்ச்சிகளை வழங்குவதை நிரூபிக்கும் பின்வரும் பயிற்சி வழங்கல் ஆவணங் களை நிறுவனங்கள் தயாரித்தல் வேண்டும்

 
   
   
 
  1. பாடநெறித்திட்டம்/ஒவ்வொரு மொடியூலுக்குமான கால வேளையைக் குறிப்பிட்ட பாடநெறிக்கான ஆண்டுத் திட்டம்.
  2. ஒவ்வொரு பணிக்கும் அல்லது பணிகளின் தொகுப்புக்கு மான கால வேளையுடன் ஒவ்வொரு மொடியூலினதும் பயிற்சித்திட்டம் / பயிற்சி அட்டவணை (படிவம் 111/05/19/00)
  3. எல்லா மொடியூல்களிலும் உள்ள ஒவ்வொரு பாடத்துக்கு மான பாடத்திட்டம் (படிவம் 111/05/20/01)
  4. வாராந்த நேர அட்டவணை
  5. போதனாசிரியர்களினால் பேணப்படும் நிகழ்ச்சிப் பதிவேடு/ பயிற்சியாளரின் நாளாந்தப் பதிவுகள்.
  6. பயிலுநர் நாளாந்த நாட்குறிப்ப/கோட்பாட்டு குறிப்புப் புத்தகம்/செயற்பாட்டு பயிற்சிக் கொப்பிகள்
  7. தொடர் கணிப்பீட்க்கான ஒவ்வொரு பணியையும் உள்ளடக்கும் கணிப்பீட் நியமங்கள்.
  8. பயிலுநர் கணிப்பீட்டு பதிவுப் புத்தகங்கள்
 
   
   
   
   
   
   
   
  மேலே குறிப்பிட்ட தேவைகளுக்கு மேலதிகமாக பின்வரும் மூலவளங்களும் மதிப்பீடு செய்யப்படும்  
 
  1. பாடநெறியை நடாத்துவதற்கு அவசியமான பயிற்சி வசதிகள் கிடைக்கக்கூஇயதாக இருப்பது.
  2. பயிற்சித் தொழிற்பணியனியினரின் தகைமை.
  3. பயிற்சித் தொழிற்பணியினரின் போதுமான தன்மை
  4. வகுப்பறைகள், வேலைத்தலங்களின் போதுமான இட வெளிகளும், பயிற்சிச் சூழலும்
  5. முகாமைத்துவமும் அறிக்கைப்படுத்தலும்
 
   
   
   
   
  சான்றளிக்கும் கட்டணங்கள்  
 
  • ஒரு பாடநெறிக்கான நற்சான்றளிக்கும் கட்டணம் ரூ. 2100.00 ஆகும்
 
  விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது கொடுப் பனவுகள் செய்யப்பட வேண்டும்.  
  சான்றளிப்புச் சான்றிதழ் கூடிய பட்சம் 3 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். இது இக்கால இடை வெளிக்குள் தரங்கள் திருப்திகரமான விதத்தில் பேணும் நிலையைப் பொருத்தே அமையும். நிறுவனம் கிரமமான விதத்தில் கணக்காய்வுக்குட்படுத்தப்படும். கணக்காய்வு திருப்திகரமாக அமையுமாயின் நற்சான்றளிப்பு புதுப்பிக்கப்படும்.

பாடநெறிக்கான நற்சான்றளிப்பு புதுப்பிக்கப்படவில்லையாயின், காலவதியான சான்றிதழை நிறுவனம் TVEC க்குத் திருப்பியனுப்ப வேண்டும். ஏனெனில் இது TVEC யின் உடமையாகும்.

 
   
   
   
   
   
  Download Application Forms  
 
Form PDF Word PDF (Tamil) Word (Tamil)
Accreditation Download Download Download Download
Accreditation Level 5&6 Download Download    
 
 
 
 

தொலைபேசி : +94 (0) 115849291, தொலைநகல்+94 (0) 112555007, மின்னஞ்சல் info@tvec.gov.lk
‘நிபுணதா பியச’ (03ம் மாடி), 354/2, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05, இலங்கை