|
|
|
| |
எல்லா
நபர்களும் யாதேனும் ஒரு பயிற்சி நிறுவனத்தில்,
அபிவிருத்தித் திட்டத்தின் உத்தரவாதத்திற்கமைய மூன்றாம்
நிலை அல்லது தொழிற் கல்வியை வழங்கி அந் நிறுவனத்தை
நிர்வகித்து, முகாமைத்துவப்படுத்தி, கண்காணித்தால் அவர்கள்
தமது நிறுவனங்களை TVEC யில் பதிவதற்கு இத்துடன்
இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தின் மூலம்
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிற்கும் நிறுவனம் சரியான, போது
மான தகவல்களை விண்ணப்பப் படிவத்திற்கு ஏற்றவாறு
நிரப்புவதோடு உரிய இடங்களுக்கு தேவையான துணை ஆவணங்களையும்
இணைத்தல் வேண்டும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பம் துணை ஆவணங்களுடன் பெறப்பட்ட
பின்னர், TVEC யின் அலுவலர்கள் பயிற்சி நிறுவனத்தை
நேரடியாக மதிப்பீடு செய்வதற்கு விஜயம் செய்வர். 1995
செப்தெம்பர் 7ஆந் திகதி யின் 888/8 இலக்க அதி விசேட
வர்த்தமானியில் வெளியிடப் பட்டிருந்த பிரமாணங் களைக்
கருத்தில் கொண்டு மதிப்பீடு நடாத்தப் படும். |
|
| |
| |
| |
| |
| |
| |
| |
| |
பதிவு
மதிப்பிடலின் போது பின்வரும் மூலப் பிரமாணங்கள்
பயன்படுத்தப்படும்: |
| |
- பாடத்திட்டம்,
பாடநெறித் தகவல்கள்
- பயிற்சி வசதிகள்
- பதவியணியிநரின் தகைமை,
அனுபவம் மற்றும் பயிற்றுவிக்கும் ஆற்றல்
- பயிற்சி வழங்கல்,
மதிப்பிடல்
- முகாமைத்துவம், பதிவு
பராமரிப்பு
- மாணவர் நலன் உதவிச்
சேவைகள்
|
| |
| |
| |
| |
| |
| |
மதிப்பீட்டு
அறிக்கையைப் பெற்றதும் பொருத்தமான வகையின் கீழ் நிறுவனம்
பதிவு செய்யப்பட வேண்டியது பற்றி பணிப்பாளர் நாயகம்
ஆணைக்குழுவுக்கு சிபாரிசு மேற் கொள்வார்.
ஆணைக்குழுவினால் குறிப்பிட்டுள்ளவாறு பணிப்பாளர் நாயகம்
நிறுவனத்தைப் பதிவு செய்வார்.
கண்காணிப்பின்போது குறைகள் ஏதும் காணப்பட்டிருப்பின்
விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன் அதற்கான காரணங்கள்
நிறுவனத்துக்கு அறிவிக்கப் படும். திருத்தச் செயற்பாடுகளின்
பின் மீள மதிப்பீட்டுக் கட்டணத்துடன் நிறுவனங்கள் பதிவு
செய்து கொள்வதற்காக மீளவும் விண்ணப்பிக்கலாம். |
| |
| |
| |
| |
| |
| |
TEVT துறையின் தர
உறுதிப்பாடு |
| |
TEVT
துறையின் தர உறுதிப்பாட்டுக்கு TVEC பொறுப்புடையது. கைத்
தொழில், பயிலுநர் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் வேண்டு
கோளுக்கு செவிசாய்க்கும் விதத்தில் இலங்கையின் TEVT
துறையின் உயர்தரத்தை TVECயின் தர உறுதிப்பாட்டுக்
கொள்கைகளும் செய்முறைகளும் முன்னெடுப்புச் செய்கின்றன.
TEVT யின் தர உறுதிப்பாடு பின்வரும் பாகக்கூறுகளைக் கொண்டது. |
| |
| |
| |
- TEVT நிறுவனங்களைப்
பதிவு செய்தல்
- பாடநெறிகளுக்கு
நற்சான்றளித்தல்
- தர முகாமைத்துவ
முறைமையை (QMS) நிறுவுதல்
- நிறுவன ரீதியான தரக்
கணக்காய்வு
|
| |
| |
| |
| |
|
|