QMS இன் விடயப்பரப்பு  
 

தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சித்துறையில் உள்ள பயிற்சி வழங்குநர்களால் பேணப்படுகின்ற கல்வியில் ISO:9001: 2008 யின் பிரயோகத்துக்கான வழிகாட்டல்களுக்கான ISO IWA 2 : 2007ன் படியும் ISO:9001:2008 இன் தர முகாமைத்துவ முறைமையின் அடிப்படையிலான அர்த்த முள்ள தர முகாமைத் துவ முறைமையை உறுதிசெய்வது இதன் விடயப் பரப்பாகும்.

குறிப்பிட்ட கல்விக்கும் முறைமையின் தொடர்ச்சியான மேம்பாட்டை உறுதி செய்வதற்குமான கல்வி யையும் பயிற்சியை வழங்குவதற்கு ஏற்ற ஒரு சூழலைத் தாபித்துப் பேணுவதற்கான ஆற்றலை வழங்குநர் கொண்டிருப்பதை தர முகாமைத்துவ முறைமை உறுதி செய்யும்.

 
     
 

தர முகாமைத்துவ முறைமையொன்றை விருத்தி செய்யும் போது செய்முறையான அணுகுமுறை யொன்றை அனுசரித்தல்.

 
     
  செய்முறை அணுகுமுறை  
 

அமைப்பின் உள்ளீட்டு முறைமைகள், செய்முறைகள் மற்றும் விளைவுகளை அவற்றின் நோக்கங்களுக்காக ஒப்பீடு செய்வத னுடன் தர முகாமைத்துவ முறைமை சம்பந்தப்பட்டுள்ளது. தர முகாமைத்துவமானது, சான்றளிக்கப்பட்ட திறன்கள் அல்லது தேர்ச்சிகளின் செல்லுபடியாகும் தன்மையையும் நம்பகத்தன்மையையும் அவற்றுக்குரியவாறு பொறிமுறை களும் செய்முறைகளும் உறுதிப்படுத்தப்படுவதை குறிப்பாக எடுத்துக் காட்டுகின்றது. செலுபடியாகும் தன்மை எனப்படுவது தான் கணிப்பீடு செய்வதற்கு நோக்கமாகக் கொண்டுள்ள வற்றைக் கணிப்பீடானது மதிப்பிடுவதாகும். நம்பகத்தன்மை எனப்படுவது வித்தியாசமான சந்தர்ப்பங்களில் வேறுபட்ட கணிப்பீட்டாளர்களால் ஒரே மாதிரியான பேற்றைத் தருகின்ற சான்றுகளின் அடிப்படையிலான கணிப்பீடாகும். தனிப்பட்ட நபர்களால் சான்றிதழ் அல்லது டிப்ளோமா ஏற்றுக் கொள்ளப் படுவதை செல்லுபடியாகுந்தன்மையும் நம்பகத் தன்மையும் உறுதி செய்கின்றன.

நிறுவன ரீதியான மட்டத்தில், தரமான கல்வியையும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களையும் வழங்குகின்ற வினைத்திறன் மிக்க செய்முறையை நோக்காகக் கொண்ட“ தர முகாமைத்துவ முறைமை” தாபிக்கப்படும்.

 
   
   
   
   
   
   
   
 

Process approach

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
  தர முகாமைத்துவ முறைமை  
  பொதுத் தேவைகள்  
  பின்வரும் 6 செயற்பாடுகளும் இனங்காணப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, அமுல் நடாத்தப்படவுள்ளன.
  1. அமைப்பிலுள்ள QMS.க்குத் தேவைப்படும் செய்முறைகளை இனங் காணல்
  2. இவ்வாறான செய்முறைகளின் தொடரொழுங்கையும் இடைத்தாக்கங் களையும் நிர்ணயித்தல்.
  3. இவ்வாறான செய்முறைகள் பயனுறுதியுடன் இருப்பதன் தொழிற் பாட்டையும் கட்டுப்பாட்டையும் உறுதி செய்வதற்கான நியமங்களை யும், முறைகளையும் நிர்ணயித்தல்.
  4. செய்முறைகளைக் கண்காணித்தல் உட்பட இச்செய்முறை களுக்குத் தேவையான வளங்களும் தகவல்களும் கிடைப்பதை உறுதி செய்தல்.
  5. அளவீட்டைக் கண்காணித்துச் செய்முறையைப் பகுப்பாய்வு செய்தல்.
  6. திட்டமிடப்பட்ட பேறுகளையும் இவ்வாறான செய்முறைகளின் தொடர்ச்சியான மேம்பாட்டை அடைவதற்குத் தேவையான செயற் பாடுகளை அமுல் செய்தல்.
 
 
  • அமைப்பு ரீதியான கட்டமைப்புக்கள், பொறுப்புக்கள், செயல் முறைகள் மற்றும் தரக்கொள்கைகளை நிறுவி, அமுல் செய்வதற் கான வளங்கள என்பவற்றை ஒன்றிணைக்கும் அர்த்தமுள்ளதான தர முகாமைத்துவ முறைமை இருப்பதற்கான சான்றுகள் இருத்தல்.

 
 
  • குறிப்பிட்ட தரங்களுக்கு கல்வியையும் பயிற்சியையும் வழங்குவதற்குப் பொருத்தமான சூழலொன்றை உருவாக்கிப் பேணும் ஆற்றலைப் பயிற்சி வழங்குநர் கொண்டிருப்பதை தர முகாமைத்துவ முறைமை உறுதி செய்தல்.
 
  தனது இலக்குகளையும் குறிக்கோள்களையும் அடைவதற்காக போதுமானதும் பொருத்தமானதுமான சிறந்த பரிபாலனத்தையும் முகாமைத்துவத்தையும் பயிற்சி வழங்குநர் கொண்டிருப்பதை தர முகாமைத்துவ முறைமை உறுதி செய்தல்.  
     
  தரக்கைந்நூல்  
  ISO 9001:2008க்கமையவும் IWA 2:2007 வழிகாட்டல்கள்படியும் தர முகாமைத்துவமுறைமை தரக் கைந் நூலொன்றை உள்ளடக்கி யிருக்கும்.  
  இத்தரக்கைந்நூல் பின்வருவனவற்றை எடுத்துக்காட்டும்
  • தேசிய தொழில்சார் தகைமைக் கட்டமைப்புக்குள்ளும் வெளி யிலும் உள்ள ஏதும் உளூர், தேசிய, சர்வதேச பாடநெறி களை உள்ளடக்கும் கல்வி மற்றும் பயிற்சியை, பயிற்சி வழங்குநர் தற்போதும் எதிர்காலத்திலும் வழங்குவதை தரமுகாமைத்துவ முறைமை உள்வாங்கியிருக்கும்.

  • தர முகாமைத்துவ முறைமையினால் சகல கல்வி மற்றும் பயிற்சியின் நிரந்தர, வழமையான அல்லது சந்தர்ப்பத்துக் கேற்றவாறு வழங்கும் இடங்கள் உள்ளடக்கியிருக்கும்.

  • மிகத்தெளிவாக நிர்ணயிக்கப்பட்ட அமைப்பின் கட்டமைப்புடனான அதிகாரத்தையும் பொறுப்புக் களையும் கைந்நூல் உள்ளடக்கியிருக்கும்.

  • முகாமைத்துவப் பிரதிநிதியையும் அதன் பொறுப்புக்களையும் கைந்நூல் குறித்துக் காட்டும்.

  • செய்முறைகளின்போது இனங்காணப்பட்ட செயல்முறைகளையும் வேலைக்கான அறிவுறுத்தல் களையும் நிறுவனம் ஆவணப்படுத்துவதுடன் தரக்கைந்நூலில் அவற்றை உசாவவும் செய்யும்.

  • தரமுகாமைத்துவ முறைமையைப் பேணுவதற்குத் தேவை யான கட்டாயப் பதிவேடுகளையும் ஏனைய பதிவுகளையும் இனங்கண்டு கைந்நூலில் அவற்றுக்கான உசாவுதலையும் நிறுவனம் வழங்கும்.

  • தரக்கொள்கையைப் பொருத்தளவில் கேந்திரமான செய்முறைக் குறிகாட்டிகளை தரக் குறிக்கோள் களாக தாபனம் இனங்கண்டு நியாயமான காலவரம்புக்குள் இவ்வாறான இலக்குகளை எய்துவதற் கான திட்டங் களையும் குறித்துக் காட்டும்.

  • மேற்கூறிய திட்டங்களினதும். தரக் குறிக்கோள்களினதும் நிலையை தாபனம் கண்காணிப்புச் செய்யும்.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
  செயல் முறைகள்  
  தர முகாமைத்துவ முறைமையானது, ISO 9001:2008 க்கமைவாகவும் IWA 2:2007 இன் வழிகாட்டல்கள் படியும் இருப்பதுடன் பின்வரும் செய்முறைகளை உள்ளடக்கும் தர உறுதிப்பாட்டுச் செயல்முறைகளை யும் உள்வாங்கியிருக்கும்.
  • செயல்முறைகளை ஆவணப்படுத்தும்போது கட்டாயமான செயல்முறை கள் ஆவணப்படுத்தப்படல்.
  • தர முகாமைத்துவ முறைமையைக் கட்டுப்படுத்தி மேம்பாட்டைச் செய்வதற்காக விரும்பப்படும் ஏனைய ஆவணங்கள்.
  • தேவையைப் பொறுத்து விருப்பத்துக்குரிய செயல்முறைகளை நிறுவனம் ஆவணப்படுத்தல்.
 
   
   
   
   
   
   
   
  தேவையைப் பொறுத்து விருப்பத்துக்குரிய செய்முறைகளை நிறுவனம் ஆவணப்படுத்தல்.
  1. பதிவுகளைக் கட்டுப்படுத்தும் செய்முறை – கட்டாயமானது
  2. முகாமைத்துவ மீளாய்வக் கட்டங்களுக்கான செய்முறை
  3. பயிற்சிக்குரிய செய்முறை
  4. பொதிகளின் பராமரிப்புச் செய்முறை
  5. கட்இட பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் செய்முறை
  6. நிதி முகாமைத்துவ செய்முறை – விருப்பத்துக்குரியது.
  7. தொழில்சார் வழிகாட்டல், ஆலோசனைக்கான செய்முறை - விருப்பத்துக்குரியது.
  8. மாணவர்களைத் தெரிவு செய்தல் அனுமதித்தலுக்கான செய்முறை
  9. வடிவமைத்தல், அபிவிருத்திக்கான செய்முறை - NVQ அல்லாத நிகழ்ச்சித் திட்டங்களுக்காக - - விருப்பத்துக்குரியது.
  10. கொள்வனவுச் செய்முறை
  11. வழங்குநர்களை மதிப்பிடும் செய்முறை
  12. வழங்கற் சேவை வழிவகைப பயிற்சியைக் கட்டுப்படுத்தும் செய்முறை
  13. கல்விசார் ஆவணங்களையும் பயிலுநர் சொத்துக்களையும் பெறுதல், களஞ்சியப்படுத்தல் மற்றும் கொடுக்கும் செய்முறை
  14. தொழிற் பனியணியின் கற்கைத் திட்டங்கள் போன்றன கணிப்பீட்டுச் செய்முறை
  15. பயிலுநர் முறைப்பாடுகள், பின்னூட்டல் செய்முறை
  16. பிரேரணைப் பெட்டியை அமுல் செய்யும் செய்முறை
  17. உள்ளகத் தரக் கணக்காய்வுச் செயன்முறை – கட்டாய மானது
  18. கல்விசார் சேவைகளைக் கண்காணித்தல்> அளவீட்டுக்கான செய்முறை
  19. ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தும் செய்முறை – கட்டாயமானது.
  20. திருத்தச் செயற்பாட்டுச் செய்முறை – கட்டாயமானது.
  21. முற்காப்புச் செயற்பாட்டுச் செய்முறை – கட்டாயமானது.
  22. நிகழ்ச்சித்திட்ட உரிமைக்கான செய்முறை – நிகழ்ச்சித் திட்ட உரிமைகளுக்காக விருப்புக்குரிய
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
  உசாவுதல்: தரக்கைந்நூலைப் பற்றி மேலும் விபரங்கள்.  
     
 
 

தொலைபேசி : +94 (0) 115849291, தொலைநகல்+94 (0) 112555007, மின்னஞ்சல் info@tvec.gov.lk
‘நிபுணதா பியச’ (03ம் மாடி), 354/2, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05, இலங்கை