நிர்வாகப் பிரிவானது ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்குரிய ஆளணி முகாமைத்துவம் மற்றும் பொது நிர்வாகம் என்பனவற்றிற்கு பொறுப்புடையதாகவுள்ளது. இப்பிரிவின் பிரதான செயற்பாடாக ஆணைக்குழுவின் பதவியணியை அபிவருத்தி செய்தல் காணப்படுவதுடன் ஏனைய செயற்பாடுகளாக பின்வருவன காணப்படுகின்றன.
- ஆணைக்குழுவின் செயற்பாடுகளை பயனுள்ளதாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மேற்கொள்வதற்கு கொள்கைகள், செயல்முறைகள் என்பவற்றை ஸ்தாபித்தல்.
- பௌதிகச் சொத்துக்கள், வாகனங்கள் போன்றவற்றை உரிய நிலையிலும் மற்றும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதனை உறுதிசெய்தல்
- திறைசேரியின் கீழ் இயங்கும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியுடன் ஆணைக்குழுவிலுள்ள பதவியணிக்கு தேவையான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்.
(Visited 597 times, 1 visits today)