1990 ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி (TVE) சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 01ஆம் குறிக்கோளினை உயிரூட்டுவதற்கு TVEC யின் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி பிரிவு பொறுப்பாகவுள்ளது. அதாவது பொருளாதாரத்தின் மனிதவளத் தேவைகளுக்கு அமைவாக மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற் கல்வியின் அனைத்து மட்டங்களிற்குமான திட்டமிடல், ஒருங்கிணைத்தல் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றினை மேற்கொள்ளல். இப் பிரிவின் பிரதான நோக்கங்கள்:
- பெருநிறுவன திட்டத்தினை மீளாய்வு செய்தல் மற்றும் புதுப்பித்தல்
- TVEC இன் வருடாந்த நடைமுறைப்படுத்தல் திட்டத்தினை தயாரித்தல் மற்றும் கண்காணித்தல்
- கைத்தொழிற் துறைகளுக்கான தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் (VET) திட்டங்களை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல்
- மாகாணங்களுக்கான தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல்
- பலவீனமான நிறுவகங்கள் உட்பட அரச மற்றும் தனியார் துறை பயிற்சி நிறுவகங்களிற்கான நிதி உதவிகளை வழங்குதல்
- நிதி உதவி வழங்கப்பட்ட நிறுவகங்களின் செயற்பாட்டினை கண்காணித்தல்
- TVET துறைகளில் ஆய்வுக்கற்கைகளை நடாத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல்
(Visited 165 times, 1 visits today)