தகவல் மற்றும் முறைமைகள் பிரிவின் பிரதானமான நோக்கமானது, TVEC இன் நடவடிக்கைகளை இலகுவாக்கும் பொருட்டு பல்வேறு கணனிமயப்படுத்தப்பட்ட தகவல் முறைமைகளை வடிவமைத்தல், அபிவிருத்தி செய்தல் மற்றும் பேணுதல் என்பனவாகும். தகவல் மற்றும் முறைமைகள் பிரிவின் பிரதானமான நடவடிக்கைகளுள் பின்வருவன உள்ளடங்குகின்றன,
- தொழிலாளர் சந்தை தகவல் முறைமைகளை விருத்தி செய்தல் மற்றும் பேணுதல்
- ஒரு வருடத்திற்கு இருதடவை தொழிலாளர் சந்தை தகவல் திரட்டினை தயாரித்து வெளியிடுதல்
- வுஏநுவு துறை சார்ந்த பாடநெறிகள் தொடர்பான தகவல்களை பகிர்வதற்கான TVET வழிகாட்டியினை தயாரித்து வெளியிடுதல்
- பயிற்சி வழங்குதல் மற்றும் அவை தொடர்பான தகவல்களை பகுப்பாய்வு செய்வதற்காக TVET துறைக்கான முகாமைத்துவ தகவல் முறைமையினை பேணுதல்
- இணைய தொடர்பாடலினை இலகுவாக்கும் பொருட்டு உள்ளக இணைய தொடர்பினை விருத்தி செய்தல் மற்றும் பேணுதல்
- TVEC இணையத்தளத்தினை அபிவிருத்தி செய்தல் மற்றும் பேணுதல்
- TVEC இன் வேறுபட்ட உபதொகுதிகளை முகாமைத்துவம் செய்யும் பொருட்டு தகவல் தொழில்நுட்ப் மென்பொருளினை அபிவிருத்தி செய்தல் மற்றும் பேணுதல்
- TVEC நிறுவகத்தின் நூலகத்தினை அபிவிருத்தி செய்தல் மற்றும் பேணுதல்
- அவசியமான சந்தர்ப்பத்தில் தொழிலாளர் சந்தை தகவல்கள் தொடர்பான விசேட பகுப்பாய்வுகளை வழங்குதல்
- TVEC நிலையங்களை அடையாளப்படுத்தும் பொருட்டு பூகோள தகவல் முறைமையினை அபிவிருத்தி செய்தல் மற்றும் பேணுதல்
- TVEC செய்திக்குறிப்புகளை ஒழுங்கமைத்தல், அச்சிடுதல் மற்றும் வழங்குதல்
உள்ளக கணக்காய்வு மற்றும் விசாரணை பிரிவு
ஓரு சுதந்திரமான அலகாக, உள்ளக கணக்காய்வு மற்றும் விசாரணை பிரிவு ஆனது நிர்வாகத்திற்கு உறுதுணையாக விளங்குவதுடன் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமான உண்மையானதும் நேர்மையானதுமான தகவல்களையும் வழங்குகின்றது.
(Visited 436 times, 1 visits today)